டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் இன்று முதல் 3 நாள்களுக்கு மிதமாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் மிதமாக இருக்கும்: வானிலை மையம் தகவல் - காற்றில் உள்ள மாசுவின் அளவு
டெல்லியில் காற்றின் தரம் மிதமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Delhi
காற்றில் உள்ள மாசுவின் அளவு 10 மைக்ரோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். மேற்பரப்பில் வீசும் பலத்த காற்று, புழுதியை எழுப்பலாம் அல்லது அருகில் உள்ள பகுதியில் இருந்து தூசுக்களைக் கொண்டு வரலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
டெல்லியில் வரும் 7ஆம் தேதி வரை காற்றின் தரம் மிதமாக இருக்க வாய்ப்புள்ளது எனவும், அதன்பின் மோசமாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.