தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்! - திருவனந்தபுரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

Air India Express
Air India Express

By

Published : Jul 23, 2023, 7:28 PM IST

திருவனந்தபுரம் : கேரளாவில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின குளிர்சாத இயந்திரத்தில் தொழிநுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் IX 539 விமானம் புறப்பட்டது. மதியம் 01.19 மணிக்கு ஏறத்தாழ 175 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த நிலையில் ஏசி இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 03.52 மணி அளவில் விமானம் புறப்பட்ட திருவனந்தபுரம் விமான நிலையத்திலே மீண்டும் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஏறத்தாழ 175 பயணிகள், சிப்பந்திகள் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட பழுதை கண்டறியும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே, மற்றொரு விமானம் மூலம் பயணிகள் துபாய்க்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க :Bihar: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு.. 9 மணிநேர போராட்டம் வெற்றி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details