தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Asaduddin Owaisi : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு வாக்கு! காரணம் தெரிவித்த ஒவைசி! - மகளிர் இடஒதுக்கீடு மசோதா அசாசுதீன் ஒவைசி எதிர்ப்பு

AIMIM chief Asaduddin Owaisi MP Vote against on Women Reservation bill : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஒபிசி மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கு உள்ஒதுக்கீடு மறுக்கப்பட்டு உள்ளதாக ஐதராபாத் எம்.பி. அசாசுதீன் ஒவைசி தெரிவித்து உள்ளார்.

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 10:55 AM IST

டெல்லி : சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் ஓபிசி மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாததால் மசோதாவை எதிர்த்து வாக்களித்ததாக ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கூட்டம் பழைய கட்டிடத்தில் நடைபெற்ற நிலையில், அதில் உரையாற்றிய பிரதமர் மோடி 75 ஆண்டுகால இந்திய வரலாற்றின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டார். தொடர்ந்து இரண்டாவது நாள் கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை வழங்கும் விதமாக கட்டடத்தின் முன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றாக குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் 128வது சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்கள் ஆதரவுக் கரம் நீடினர். மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தனர்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த இம்தியாஸ் ஜலில் ஆகிய இரண்டு பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதுகுறித்து பேசிய ஒவைசி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் இஸ்லாமிய மற்றும் ஓபிசி பெண்களுக்கான உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், ஓபிசி மற்றும் இஸ்லாமிய பெண்களை உள்ஒதுக்கீடு வரம்பில் சேர்க்கக்கோரி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடுகிறார்கள் என்பதை நாடு அறியும் வகையில் தான் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அசாசுதீன் ஒவைசி கூறினார். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமாக ஓபிசி மக்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு போதுமான பிரதிநித்துவத்தை நாடாளுமன்றம் மற்றும் சட்டபேரவையில் வழங்க இந்த மசோதா வழிவகை செய்யவில்லை என்று தெரிவித்தார்

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இஸ்லாமிய பெண்கள் 7 சதவீதம் பேர் இருப்பதாகவும் அவர்களை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அசாசுதீன் ஒவைசி தெரிவித்தார்.

இதையும் படிங்க :மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. சட்டமாக இவ்வளவு நாளாகுமா? முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details