தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிமுக கொள்கை இல்லாமல் சீர்குலைந்து வருகிறது... சிபிஐ பொதுச்செயலாளர் ராஜா - DMK

தமிழ்நாட்டில் அதிமுக இரு பிரிவுகளாகப் பிரிந்து கொள்கை இல்லாமல் சீர்குலைந்து வருவதாக சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து கொள்கை இல்லாமல் சீர்குலைந்து வருகிறது... சிபிஐ ராஜா விமர்சனம்
அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து கொள்கை இல்லாமல் சீர்குலைந்து வருகிறது... சிபிஐ ராஜா விமர்சனம்

By

Published : Aug 18, 2022, 8:52 AM IST

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு புதுச்சேரி இசிஆர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் சலீம் தலைமை தாங்கிய நிலையில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிபிஐ அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா சிறப்புரை ஆற்றினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் 14 முதல் 18 ஆம் தேதி வரை ஆந்திரா மாநிலம் விஜயவாடா நகரில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் கட்சி மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இன்று புதுச்சேரியில் நடைபெற்றது. எங்களுடைய கட்சி மாநாடுகளில், அரசியல் தீர்மானம் ஒன்று விவாதத்திற்கு வந்திருக்கிறது. பாஜக அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது. மாநில உரிமைகளை பறித்து வருகிறது. சமூக நல்லிணக்கத்தை குறைத்து மோதல்களை பெருக்கி வருகிறது, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு

2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை முறியடிக்க வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். பீகாரில் நடந்த ஆட்சி மாற்றம் வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் மையமாக செயல்படுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற மாநில அரசை புறக்கணித்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். மாநில உரிமைகளின் நலன்கள் பறிக்கப்படுகின்றன. மத்திய அரசின் ஆதிக்கம் இங்கு நிலைநிறுத்தப்படுகிறது. இதை எங்களுடைய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை சம்பந்தப்பட்ட அதிமுகவின் இரு பிரிவுகள் யோசிக்க வேண்டும்.

அதிமுக கொள்கை இல்லாத நிலையில், சீர்குலைந்து வருகிறது. அதனை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. இதை மட்டும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:பொதுக்குழு எப்போது கூடினாலும் அதன் மையக்கருத்து ஒற்றைத்தலைமைதான்.. முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details