தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகமது நபி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட எம்.எல்.ஏவின் இடைநீக்கம் ரத்து! தெலங்கானா தேர்தலையொட்டி பாஜக சூட்சமம்!

BJP revokes suspension of MLA Raja Singh : முகமது நபி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக இடை நீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மேலிடத்தின் முடிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

MLA Raja Singh
MLA Raja Singh

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 12:49 PM IST

டெல்லி : இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா, இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. டி.ராஜா மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு பாஜகவின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் வழங்கியது.

முகமது நபி குறித்து விவகாரத்தில் வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறும், அந்த விவகாரத்தில் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. டி.ராஜா சிங்கிற்கு கட்சி மேலிடம் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக பாஜகவின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ஓம் பதாக் தெரிவித்தார்.

இடை நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. டி.ராஜா சிங், கட்சி மேலிடம் தன் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்யும் என்றும் தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலில் கோசமஹால் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது கூடுதல் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அதேநேரம், பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் காங்கிரஸ் அல்லது தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி என எந்த கட்சியிலும் எம்.எல்.ஏ டி.ராஜா சிங் சேராமல் இருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ. டி.ராஜா சிங் மீதான இடை நீக்க உத்தரவை பாஜக மேலிடம் ரத்து செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் இறுதியில் தெலங்கானாவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டி.ராஜா சிங்கின் இடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மாநிலம் தொடங்கப்பட்ட 2014ஆம் ஆண்டு முதல் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக தொடர்ந்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இம்முறை காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக என தெலங்கானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி ஆட்சியைக் கைப்பற்றவே சக்தி வாய்ந்த தலைவர்களை பாஜக திரட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details