பெங்களூரு:மனதில் தோன்றுவதை எல்லாம் செய்ய வேண்டும், பிடித்த பாடத்தைப் படிக்க வேண்டும், பிடித்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்று யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். நாட்டில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் இஷ்டம்போல் நகரும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு வேலை செய்வது என்றால், நம் அனைவருக்கும் ஒரு அலாதியான மகிழ்ச்சி வருகிற மாதிரி தோன்றுகிறதா?
நமது நாடே நம்மைத் தான் நம்பியிருக்கிறது, நமது நாட்டை நெருங்க வேண்டும் என்றால் நம்மைத் தாண்டி சென்றாலே அது நடக்க வேண்டும் என்று நாட்டுப் பற்றுடன் எல்லையில் கடுமையான வெயிலிலும் உறைய வைக்கும் குளிரிலும் வாட்டி எடுக்கும் சூழலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு இந்த ஏசி காற்று ஒன்றும் எட்டாக் கனியல்ல. நமது நாட்டில் எத்தனையோ தனியார்த் துறை பணிகள், அரசுப் பணிகள் என எத்தனையோ குவிந்து கிடந்தாளும் காத்திருந்து தேடி அலைந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்பது இங்குள்ள இளம் தலைமுறைகளுக்கு வழக்கமாக உள்ளது.
இருப்பினும், அண்மைக்காலங்களாக ராணுவப் பணிகளின் மீது இளம் தலைமுறையினருக்கு இருந்த நாட்டம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆங்காங்கே அதிகரித்து வரும் ஐடி நிறுவனங்கள், மரத்துக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் சேருவதற்கு அலைமோதும் இளம் தலைமுறையினரின் கூட்டம் ஏன் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமையாக உள்ள ராணுவத்தின் பக்கம் திரும்புவதில்லை என கேள்வியெழுப்பியுள்ளார், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி.
அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், முதன்முறையாக அக்னி வீரராகத் தேர்வு செய்யப்பட்ட 100 இளம்பெண்களுக்கு அக்னிபாத் யோஜனா திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பெண் அக்னி வீராங்கனைகளாக பணியமர்த்தப்பட்டு அதற்கான பயிற்சிகள் கர்நாடகாவில் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அங்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிருந்தும் தேர்வாகிய 100 இளம் பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம், உடுப்பி பைந்தூரைச் சேர்ந்த ஸ்ரீதேவி நமது ஈடிவி பாரத்திடம் பேசியபோது, 'ராணுவ வீரர்களின் சீருடை அணிந்த காணொளிகளையே நான் எனது சிறுவயது முதல் பார்த்து வளர்ந்தேன். இதனால், நான் வேலை செய்தால் ராணுவத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று சிறு வயதிலேயே முடிவு செய்துவிட்டேன். எனக்கு ஏசி அறையில் வேலை செய்வது பிடிக்காது.