டெல்லி:இந்திய ராணுவத்தின் "அக்னிபாத்" திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட், ஜார்க்கண்ட், டெல்லி, தெலங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்துவருகிறது. இந்த போராட்டங்களின்போது பேருந்துகள், ரயில்கள் மீது கல்வீசுவது போன்ற வன்முறைகள் அரங்கேறுகின்றன.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், தெலங்கானாவில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தப் போராட்டங்களினால் நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.