தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Leena Nagvanshi: துனிஷா சர்மாவை தொடர்ந்து லீனா நாக்வன்ஷி மரணம்! - Leena Nagvanshi death

நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

After
After

By

Published : Dec 28, 2022, 12:52 PM IST

ராய்கர்: இந்தி தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா(21) கடந்த 24ஆம் தேதி படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் துனிஷா சர்மாவின் முன்னாள் காதலனான நடிகர் ஷீசன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இதே போன்றதொரு சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி(22) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், லீனாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

B.Com இரண்டாம் ஆண்டு படித்து வந்த லீனா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர். இன்ஸ்டாகிராமில் 10,000- க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களை கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தார். இறுதியாக கடந்த 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:Tunisha Sharma: காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு.. துனிஷா மரணத்தின் முழு பின்னணி?

ABOUT THE AUTHOR

...view details