நியூயார்க் (அமெரிக்கா):டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலை கொடுத்து வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். ஊழியர் வேலைநிறுத்தம், ப்ளூ டிக் விவகாரம் எனத் தொடர்ச்சியாக டிவிட்டர் குறித்த சர்ச்சைகள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், டிவிட்டர் தலைமைப்பொறுப்பில் தொடரலாமா அல்லது வெளியேறுவதா என எலான் மஸ்க் பொது வாக்கெடுப்பு நடத்தினார். மேலும் வாக்கெடுப்பில் வரும் இறுதி முடிவைப் பின்பற்றுவதாகவும் எலான் மஸ்க் உறுதியளித்தார்.
வாக்கெடுப்பு தொடங்கியது முதலே ட்விட்டரை விட்டு எலான் மஸ்க் வெளியேற பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், எலான் மஸ்க் வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்து 57. 5 சதவீதம் பேர், ஏறத்தாழ 17 லட்சம் பேர் வாக்களித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் எலான் மஸ்கிற்கு ஆதரவு கரம் நீட்டியும் சிலர் வாக்களித்தும், கமாண்டுகளைப் பதிவிட்டும் வருகின்றனர். வாக்கெடுப்பு முடிவை பின்பற்றுவதாக எலான் மஸ்க் உறுதி அளித்த நிலையில், டிவிட்டரை விட்டு அவர் வெளியேறுவாரா என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
இதையும் படிங்க:Tax on Taj: வீட்டு வரி செலுத்தாததால் தாஜ்மஹாலுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்!