குஜராத் மாநிலம், ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் அபேக்ஷா மராடியா. இவர், இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கரோனா தொற்றால், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது தந்தையை இழந்தார். அதனைத்தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்களில் தனது தாயாரையும் இழந்தார்.
கரோனாவால் பெற்றோர் இறப்பு: துக்கத்திலும் நோயாளிகளுக்கு சேவை செய்யும் மருத்துவ மாணவி! - கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்ய திரும்பிய மருத்துவ மாணவி
அகமதாபாத் (குஜராத்): மருத்துவ மாணவி அபேக்ஷா மராடியா கரோனா தொற்றால் தனது பெற்றோரை இழந்த நிலையிலும், கரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தற்போது பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அபேக்ஷா மராடியா ஏப்ரல் 27ஆம் தேதி சாம்ராஸில் உள்ள கரோனா வார்டுக்குப் பணிக்காகத் திரும்பினார். இது குறித்து அவர் கூறியதாவது, கரோனா வார்டில் சிகிச்சை பெறுவர்களுக்குத் தன்னால் முடிந்தவற்றை செய்வதன் மூலம் எனது துக்கங்களை மறக்க விரும்புகிறேன்.
மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் நான் எனது பெற்றோருக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவேன். கரோனா நோயாளியின் நிலை மேம்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார். கரோனா வார்டிலுள்ள நோயாளிகளின் அறிக்கைகளைக் கையாள்வதிலும் அவர்களின் ஆக்ஸிஜன் அளவைப் பராமரிப்பதிலும், நோயளிகளுக்கு மருந்து வழங்குவதற்கும், மருவத்துவர்களின் குழுவிற்கு அபேக்ஷா மராடியா உதவி வருகிறார்.