தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய வகை கரோனாவை விரட்டியடிக்க மத்திய அமைச்சரின் புதிய மந்திரம் - கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் - Ramadas Athawale plans to beat new Covid strain

புதிய வகை கரோனா பரவலை தடுக்க 'நோ கரோனா கரோனா நோ' என்ற வாசகத்தைக் கூறி மக்கள் முழக்கமிடவேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

By

Published : Dec 27, 2020, 11:03 PM IST

கரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் இணைந்து 'கோ கரோனா கோ கரோனா' என முழக்கமிடவேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலா முன்னதாக கூறியிருந்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. புதிய வகை கரோனா பரவலை தடுப்பது எப்படி என்பது குறித்து ராம்தாஸ் அத்வாலே மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், " கரோனா பரவலை தடுக்க கோ கரோனா கோ கராேனா என்ற வாசகத்தை முழக்கமிட வேண்டும் என நான் முன்னதாக கூறியிருந்தேன். இதனை தொடர்ந்து தற்போது கரோனா பரவல் குறைந்து வருகிறது. அதேபோல் புதிய வகை கரோனா பரவலை தடுக்க அனைவரும், 'நோ கரோனாே கரோனா நோ' என முழக்கமிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமைச்சரின் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்களை ஆதரித்தாரா ராகுல்?

ABOUT THE AUTHOR

...view details