தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து ‘மஞ்சள் பூஞ்சை’ : அதிர்ச்சியில் மருத்துவ உலகம்! - கறுப்பு பூஞ்சை

முன்னதாக கரோனாவிலிருந்து மீண்டு இரண்டு மாதங்களே ஆன நபருக்கு மூக்கு, கண்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரைப் பரிசோதித்ததில் அவர் மஞ்சள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர் முன்னதாக கறுப்பு, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளுக்கும் ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் பூஞ்சை
மஞ்சள் பூஞ்சை

By

Published : May 24, 2021, 6:09 PM IST

கரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், கறுப்பு பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை என கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கும் இணை நோய்களும் நாட்டில் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவோடு சேர்த்து கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதிதாக முளைத்துள்ள 'மஞ்சள் பூஞ்சை’

இந்தியாவில் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கறுப்பு, வெள்ளைப் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மஞ்சள் பூஞ்சை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது,

கரோனா நோயாளி

உத்தரப் பிரதேசம், காசியாபாத்தில் கரோனா தாக்குதலுக்கு உள்ளான நபர்களிடம் இந்த மஞ்சள் பூஞ்சை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கறுப்பு, வெள்ளை பூஞ்சைகளைவிட இது அபாயகரமானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக கரோனாவிலிருந்து மீண்டு இரண்டு மாதங்களே ஆன நபருக்கு மூக்கு, கண்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரைப் பரிசோதித்ததில் அவர் மஞ்சள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர் முன்னதாக கறுப்பு, வெள்ளை பூஞ்சை பாதிப்புகளுக்கும் ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் பூஞ்சை

அறிகுறிகள்

சோம்பல், குறைந்த பசி, அல்லது பசியின்மை, எடை இழப்பு ஆகியவற்றை இதன் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சீழ் கசிவு, காயங்கள் மெதுவாக குணமாதல், ஊட்டச்சத்து குறைபாடு, உறுப்பு செயலிழப்பு, நெக்ரோசிஸ் எனப்படும் கண் நோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மஞ்சள் பூஞ்சை

எவ்வாறு தவிர்ப்பது...

சுகாதாரமற்று உடலை மோசமாகப் பேணுதல், மஞ்சள் பூஞ்சை வளர வழிவகுக்கூடும் என்றும், வீட்டையும் உடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், கெட்டுப்போன, அதிக நாள்கள் ஃப்ரிட்ஜில் சேமித்து, பதப்படுத்தி வைக்கும் உணவுகளைத் தவிர்க்கும்படியும் தெரிவிக்கின்றனர். பாக்டீரியா, பூஞ்சைகள் பெருக வாய்ப்பளிக்காமல் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பேணுமாறும் தெரிவிக்கின்றனர்.

மஞ்சள் பூஞ்சை குறித்து மருத்துவர்

மேலும், அறையின் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம் என்றும், பூஞ்சை வளராமல் தவிர்க்கும் வகையில் 30-40 விழுக்காடு அறையின் வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details