கோழிக்கோடு:கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கரோனா வைரஸின் அச்சுறுத்தலில் உலகமே ஸ்தம்பித்திருந்த நிலையில், உலகளவில் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு, உலகமே கரோனா பிடியில் இருந்து மீண்டு வந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் கேரளா மாநிலத்தில், நிபா வைரஸ் மற்றும் அவ்வப்போது பன்றிக்காய்ச்சல் தொற்று சற்று அதிகரித்தே காணப்பட்டது. இதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநில அரசால் சில நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டன.
கேரளாவில் தீவிரமடைந்த இந்த பாதிப்பு, பொதுமக்களிடத்தில், ஆயிரக்கணக்கில் உயிர்பலி வாங்கியது. தற்போது வரை, இந்த பாதிப்புகள் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது என கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், லட்சக் கணக்கிலான கோழிகள், பன்றிகள் பொதுமக்கள் வசிப்பிடத்தில் இருந்து தூரமாக கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டன. இருப்பினும் கேரளா மாநிலம், கோழிக்கோடு சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் நிபா மற்றும் பன்றிக்காய்ச்சலால் அதிகளவில் பாதிப்புக்குள்ளானது.
காய்ச்சலின் வீரியம் அதிகரித்த நிலையில், பள்ளி, கல்லூரி, புன்னிய தலங்கள், சந்தைகள் என மக்கள் அதிகளவில் புலங்கும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. மாநில அரசின் துரித செயலால் நோய்களின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நீடித்து இருந்த இந்த சூழலில், தற்போது மீண்டும் நோய் பாதிப்பு அபாயம் உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரா என்ற பகுதியில், காட்டுப்பன்றி ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பெற்ற தகவலின் அடிப்படையில், சென்ற வனத்துறையினர் இறந்துகிடந்த காட்டுப்பன்றியை கைப்பற்றி ஆராய்ச்சிக்காக போபாலில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆராய்ச்சிக்குப் தகவல்கள் மீண்டும் கேரளா அரசுக்கு ஆட்டத்தை கொடுத்துள்ளது. இறந்து கிடந்த பன்றியை ஆய்வு செய்ததில், நிபா வைரஸ் மற்றும் ஆப்பிரக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கேரளா மாநிலத்தில், ஆப்பிரக்கன் பன்றிக்காய்ச்சலால் ஏற்பட்டுள்ள முதல் பாதிப்பு இதுவாக பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று மனிதர்களிடையே நேரடியாக பரவுக்கூடிய வைரஸ் இல்லை என்றும் தெளிவு படுத்துகிறது ஆராய்ச்சியின் முடிவுகள்.
இதனால் கேரளா மாநிலத்தில், மக்கள் வசிப்பிடத்தில் இருந்து பன்றிகள் அனைத்தும் அகற்றபட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வசிப்பிடத்திற்கு அருகில் எந்த பன்றி பன்னைகளை அகற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து, கேரளா மாநிலத்தில் பன்றி பன்னை மற்றும் பன்றி வளர்ப்பவர்களுக்கு மாநிலம் சார்பாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இவர்களுக்கு, அக்டோபர் 6ஆம் தேதி, மாவட்ட கால்நடை மருத்துவமனை மண்டபத்தில் இது குறித்து விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.