இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் விடுத்துள்ள கூட்டறிக்கையில், “திமுகவின் பல்வேறு தில்லுமுல்லுகளையும், முறைகேடுகளையும் தாண்டி, சட்டப்பேரவை தேர்தல் சுமூகமாக நடக்க ஒத்துழைப்பு நல்கிய கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள் - அதிமுக - ஓபிஎஸ் இபிஎஸ்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இரவு பகல் பாராமல் கண்காணிக்க கட்சியினரை அதிமுக அறிவுறுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவு பெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் இரண்டாம் தேதி அன்று முடிவுகள் வரும் வரை, கட்சி வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை, மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மண்ணை, மொழியை, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் - கமல்