ஸ்ரீஹரிகோட்டா:ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியன் குறித்து ஆராயச்சியில் ஈடுபட்டு உள்ள, இஸ்ரோ அதன் ஒரு பகுதியாக ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி உள்ளது.
Aditya L1 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்1! - ஆதித்யா எல்1 விண்கலம்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் ஏவப்படும் ஆதித்யா எல்1 விண்கலத்துடன் பிஎஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
Published : Sep 2, 2023, 12:01 PM IST
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ள இஸ்ரோ, அதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (செப். 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தியது.
புவியிர்ப்பு விசையை தாண்டிய பிஎஸ்எல்வி சி-57 மூன்று கட்டங்களை தாண்டி விண்ணில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. ராக்கெட் மூன்று கட்டங்களை வெற்றிகரமாக தாண்டிய நிலையில், பூஸ்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 61 நிமிடங்களில் நிலை நிறுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளர்.