புது தில்லி: சந்திரயான் - 3 ந் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவியது. பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் திவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
புவியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரியனின் ஆய்வுப்புள்ளியான லாக்ராஞ்சியன் புள்ளி-1 ஐ சென்றடைய 125 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு வருகிறது. லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பயணத்தில், புவியின் ஈர்ப்பு வட்டப்பாதையில் இருந்து வெளியேறி தற்போது அடுத்தக்கட்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பயணத்தில், ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பொறுத்தப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோமீட்டர் சூரிய அனலிலிருந்து வெளியேறும் X-ரேக்களின் புகைப்படத்தை முதல் முறையாக படமெடுத்துள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது X வலைதளத்தில், ஆதித்யா எல்-1-ன் முதல் ஆய்வுப் புகைப்படங்களை கிராஃப் வடிவில் பதிவிட்டுள்ளது. அதில்,
"HEL1OS X-ray Spectrometre:அதன் முதல் ஆய்வுக்காலமான கடந்த மாதம் 29ஆம் தேதி பதிவான புகைப்படத்தை கிராஃப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அந்தக் கதிர்கள் சூரிய சுற்றுப்பாதையில் பெரும் ஒளி நிறைந்தவையாக இருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் அதில் இருந்து வெளிவரும் கதிர்கள் ரேடியோ, ஆப்டிகல், UV, மென்மையான எக்ஸ்-கதிர்கள், கடின எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா-கதிர்கள் போன்ற பல்வேறு மின்காந்த கதிர்வலைகளை மேம்படுத்துகிறது.