டெல்லி: சென்னையில் ஹைபர் ஸ்கேல் தரவு மையம் ஒன்றைத் தொடங்க தொழிலதிபர் கௌதம் அதானி குழுமம் அறிவித்துள்ளது. இந்தத் தரவு மையம், உலகில் வேகமாக வளர்ந்து வரும் தரவு மையங்களில் ஒன்றாக விளங்கவுள்ளது. ‘சென்னை 1’ எனும் இந்த தரவு மையம் தமிழகத்தின் முதல் IGBCயால் பிளாட்டினம் ரேட்டிங் அளிக்கப்பட்ட தரவு மையமாகும்.
சென்னையில் தரவு மையம் தொடங்கும் அதானி குழுமம்
அதானி குழுமம் சென்னையில் தர மையம் ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது இந்தியா உலகத்தின் அதிவேக வளர்ச்சி பெரும் தரவு மைய மார்க்கெட்டாக விளங்குகிறது. தற்போது இந்தியாவின் தரவு மைய அளவீடு 600MV-யாக உள்ளது. இது 2024இல் 1,300 MVஆக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதானி கனெக்ஸ் நிறுவனம் இந்தியாவிலுள்ள ஏனைய மாவட்டங்களான மும்பை, நவி மும்பை, நொய்டா, பூனா, கல்கத்தா, புவனேஷ்வர், பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் தரவு மையங்களைத் தொடங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 50% டெல்லி அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் - என்ன காரணம்?