டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ஆம் நாள் அமர்வு இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பட்ஜெட் நேரத்தின்போது அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மேலும் எதிர்க்கட்சிகள் அதானி குழும பொதுத்துறை வங்கிகளின் கடன் வெளிப்பாடு குறித்து ஆராய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
அதானி குழும விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு!
அதானி குழுமத்தின் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதானி குழும விவகாரம்: நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு
இந்நிலையில் எதிர்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்ற அவைகள் இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியபோது தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதையும் படிங்க: அதானி குழும விவகாரம் - நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!