தமிழில் 'செம்பருத்தி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. அதன்பிறகு தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடித்து பிரபலமான அவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
நடிகை ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை! - எம்.எல். ஏ ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை
சென்னை: நடிகையும் ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
Roja
அதுமட்டுமல்லாது அரசியலில் சேர்ந்த ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் இவருக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.