மும்பை: மராத்தி, இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடரில் நடித்த புகழ்பெற்ற நடிகர் விக்ரம் கோகலே (77), புனேயில் உள்ள மருத்துவமனையில் இன்று (நவம்பர் 26) காலமானார். பல்வேறு நேய்களால் பாதிக்கப்பட்ட கோகலே, தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை இன்று மதியம் மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல மராத்தி நாடக மற்றும் சினிமா நடிகரான சந்திரகாந்த் கோகலேவின் மகன் விக்ரம் கோகலே. இவர் இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.