தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Actor Sarath Babu is Stable: நடிகர் சரத்பாபு நலமுடன் இருக்கிறார் - குடும்பத்தினர் தகவல்! - நடிகர் சரத்பாபு இறப்பு

உடல் நலக்கோளாறால் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான தகவல்களுக்கு அவரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Sarath Babu
Sarath Babu

By

Published : May 3, 2023, 10:14 PM IST

ஹைதராபாத் : நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்து உள்ளனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நடிகர் சரத்பாபு. கடந்த 1971ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகர் சரத்பாபு அறிமுகமானார். சுமார் 40 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்டப் படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் சரத் பாபு நடித்து உள்ளார். சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் சரத்பாபு நடித்து உள்ளார்.

இந்த நிலையில், சரத்பாபு கடந்த சில நாட்களாக உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்து உள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு,ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சரத்பாபு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக நடிகர் சரத் பாபு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதை சரத்பாபுவின் குடும்பத்தினர் மறுத்து உள்ளனர். இது குறித்து சரத்பாபுவின் பிஆர்ஓ வெளியிட்ட அறிக்கையில், "நடிகர் சரத்பாபு உடல்நலம் தேறி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்புச் செய்தி மறைவதற்குள் நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்தச் செய்தி பொய்யான தகவல்கள் என்றும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் நடிகர் சரத் பாபுவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க :Actor Manobala : நடிகர் மனோபாலா மறைவு - முதலமைச்சர், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details