தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் புதிதாக 280 பேருக்கு கரோனா உறுதி - புதுச்சேரி கரோனா பரவல் அதிகரிப்பு

புதுச்சேரியில் புதிதாக 280 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு விவரம்
கரோனா பாதிப்பு விவரம்

By

Published : Jan 8, 2022, 10:55 PM IST

புதுச்சேரி சுகாதாரத் துறை இன்று (ஜனவரி 8) வெளியிட்டுள்ள தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 234, காரைக்காலில் 27, மாஹேவில் 19 என மொத்தம் 280 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் உயிரிழந்துள்ளதால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,882 என உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரம்

மாநிலத்தில் தற்போது 825 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,27,571 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,30,278 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி முதல் தவணை 8,74,619 பேரும் இரண்டாம் தவணை 5,76,671 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 14,51,290 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஏற்காட்டில் பாராசூட்டில் பறந்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details