மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், "கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 487 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 98 புள்ளி 7 சதவீதமாக உள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 79 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1 புள்ளி 2 சதவீதமாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 692 ஆக குறைந்துள்ளது.