ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரோஷ்னி (வெளிச்சம்) திட்டத்தில் நில முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் பயனாளிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் சயீத் ஷாநவாஸ் ஹாசன் தெரிவித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் சயீத் ஷாநவாஸ் ஹாசன் ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரோஷ்னி திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் எதிராக எந்தவொரு சார்பும் இல்லாமல் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஃபரூக் அப்துல்லா மௌனம்
இந்தத் திட்டத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக விசாரணை நடந்துவருகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களை சூறையாடியவர்களிடமிருந்து ஒவ்வொரு பைசாவும் திரும்பப் பெறப்படும்” என்றார்.
மேலும் இந்த விவகாரத்தில் ஃபரூக் அப்துல்லா மௌனம் கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ரோஷ்னி திட்டத்தில் முறைகேடு குறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஷ்னி சட்டம்