பஞ்சாப்:பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் மூத்தத் தலைவர் சித்துவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் மேலிட அழுத்தம் காரணமாக அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து சித்துவின் ஆதரவாளர்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், தற்போது அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விவசாயிகள் பிரச்சினைகளில் தீர்வுகாண முன்வரும்பட்சத்தில், 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:'காங்கிரஸிற்கு கல்தா, பாஜகவுக்கு நோ'- அமரீந்தர் சீக்ரெட்!