ஆம் ஆம்தி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குஜராத் சென்றுள்ளார். அங்குள்ள அகமதாபாத்தில் கட்சி அலுவலகத்தை திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளரை சந்தித்தார்.
குஜராத்தில் ஆம் ஆத்மிதான் மாற்று:
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், 2022ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்று ஆம் ஆத்மி கட்சிதான். குஜராத் விரைவில் மாற்றத்தை சந்திக்கும் எனக் கூறினார்.
முன்னதாக அகமதாபாத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் மாநில தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், குஜராத்தின் பிரபல ஊடகவியலாளர் இசுடான் காத்வி, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.
குஜராத்தில் தடம் பதிக்க திட்டம்
அண்மையில் நடந்துமுடிந்த குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னேற்றத்தைக் கண்டது. சூரத் நகராட்சியில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி எழுச்சி கண்டுள்ளது. இந்த ஏற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் முழு வீச்சில் களமிறங்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:லட்சங்களில் வருமானம் கொட்டும் மாதுளை சாகுபடி!