ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக முதலமைச்சருக்கு எதிராக ராணுவ அலுவலரை களமிறக்கும் ஆம் ஆத்மி! - ஆம் ஆத்மி

டேராடூன்: கங்கோத்ரி தொகுதி இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத்துக்கு போட்டியாக ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் கர்னல் அஜய் கோத்தியாலை ஆம் ஆத்மி கட்சி களமிறக்கியுள்ளது.

Ajay Kothiyal
Ajay Kothiyal
author img

By

Published : Jul 2, 2021, 1:09 PM IST

உத்தரகண்ட் முன்னாள் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகிய நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பவுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த தீரத் சிங் ராவத் பொறுப்பேற்றார்.

இவர், தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்ள ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ அலுவலரை களமிறக்கிய ஆம் ஆத்மி

அதன்படி வரும் செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்துக்கு எதிராக ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் கர்னல் அஜய் கோத்தியாலை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய கோத்தியால், “பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரகண்ட் மாநிலத்தை சிதைத்து விட்டது. இந்நேரத்தில் தீரத் சிங் ராவத்தை எதிர்த்து போட்டியிடுவது எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. நான் கங்கோத்ரி தொகுதியின் பல கிராமங்களுக்கும் சென்றுள்ளேன். இந்த முறை மக்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

இதையும் படிங்க:மராத்தா இடஒதுக்கீடு ரத்து- மத்திய அரசின் மறுபரிசீலனை நிராகரிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details