தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாகச விளையாட்டுக்காக கிணற்றில் குதித்த இளைஞர் உயிரிழப்பு! - விளையாட்டுக்காக கிணற்றில் குதித்தவர் பலி

தெலங்கானா மாநிலம், விகராபாத் மாவட்டத்தில் இரவு நேரத்தில் சாகச விளையாட்டுக்காக கிணற்றில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

died
died

By

Published : Oct 30, 2022, 5:27 PM IST

விகராபாத்(தெலங்கானா): தெலங்கானா மாநிலம், விகராபாத் மாவட்டத்தில் கொதுமகுடாவில் உள்ள ரிசார்ட்டில் சாகச விளையாட்டுக்களை நடத்தும் அட்வெஞ்சர் கிளப் உள்ளது. இந்த கிளப் மூலம், மூன் லைட் புரோகிராம் என்ற பெயரில், இரவு நேரத்தில் சாகச விளையாட்டுக்களை நடத்துகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக 'டேஞ்சர் கேம்' என்ற விளையாட்டு நேற்றிரவு(அக்.29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரிசார்ட்டுக்குச் சென்றனர்.

இந்த விளையாட்டில், தூக்கி வீசப்பட்ட பொருளைக் கண்டுபிடித்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் டாஸ்க். அதன்படி நேற்றைய விளையாட்டில் அந்தப்பொருளை கிணற்றுக்குள் தூக்கி வீசினர். அதைக் கண்டுபிடிக்க சாய்குமார் என்ற இளைஞர் கிணற்றில் குதித்தார். எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மருமகன்

ABOUT THE AUTHOR

...view details