தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி கலவரம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இஸ்லாமிய அமைப்பு! - Jamiat

டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாமியத் என்ற இஸ்லாமிய அமைப்பு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

By

Published : Mar 27, 2021, 11:53 AM IST

டெல்லி: கடந்தாண்டு டெல்லி கலவரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வாழ இடமில்லாத நிலையில் அவதியுறுகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீடுகளை மீண்டும் கட்டித் தர ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு முன்வந்துள்ளது.

இது குறித்து ஈடிவி பாரதிடம் பேசிய ஜாமியத் உலமா-இ-ஹிந்தின் பொதுச் செயலாளர் மௌலானா மஹ்மூத் மதானி, “கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத அடிப்படையில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் உதவ நாங்கள் முயற்சிக்கிறோம்.

கடந்தாண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்து குடும்பங்களுக்கும் நாங்கள் உதவியுள்ளோம். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஷிவ் விஹாரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம்.

டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அளித்த உதவி சரிவர கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கவில்லை.

அந்த வகையில், டெல்லி கலவரத்தில் தாக்கப்பட்ட 166 வீடுகளை இந்த அமைப்பு மீண்டும் கட்டி கொடுத்துள்ளது. 46 கடைகளும் மீண்டும் கட்டப்பட்டுள்ளன. கோகல்பூரி டயர் சந்தையில் சுமார் 224 கடைகளை மீண்டும் புதுப்பித்து கொடுத்துள்ளோம். இது தவிர டெல்லியில் 10 மசூதிகளும் கட்டப்பட்டுள்ளன” என்றார்.

தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதைத்தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது. இதில், குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 200 பேர் காயமடைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details