உத்தரபிரதேசம்: லக்கிம்பூர் கேரியில் நேற்று (ஆகஸ்ட் 17) ஒரு பெண், தனது காதலனின் பிறப்புறுப்பை துண்டித்துள்ளார். தனது மகளுடன் தொடர்பு கொள்ள முயன்றதால் அந்த பெண் அவரது பிறப்புறுப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “லக்கிம்பூர் கேரியில் திருமணமாகி தன் மகளுடன் தனியாக வாழ்ந்துவரும் பெண், கமலாபூரை சேர்ந்த ஹரிசங்கர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடைய நெருங்கிய உறவு இருந்துள்ளது.
இதற்கிடையில் ஹரிசங்கரின் பார்வை, காதலியின் மகள் மீது திரும்பியுள்ளது. இந்த விஷயம் காதலிக்கு தெரியவர, காதலனை எச்சரித்துள்ளார். அதையும் மீறி, ஹரிசங்கர் மீண்டும் காதலியின் மகளுடன் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காதலி, ஹரிசங்கர் பிறப்புறுப்பை துண்டித்துள்ளார்.