ஹைதராபாத்: ராமோஜி ஃபிலிம் சிட்டி மற்றும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி இடையே சுற்றுலா ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும் உள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் சுற்றுலா பேக்கேஜ்கள் குறித்து தெரிவிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் மேலாண் இயக்குநர் விஜயேஸ்வரியும், ஐஆர்சிடிசியின் மத்திய மண்டல பொது மேலாளர் நரசிங்க ராவும் கையெழுத்திட்டனர்.