கவுகாத்தி:அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, அங்கு விளையும் அரியவகை கோல்டன் டீத்தூள் கவுகாத்தி தேயிலை ஏல நிலையம் (GTAC) மூலம் 99,999 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது. இந்நிலையத்தின் செயலாளர் தினேக்ஷ் பிகானி கூறுகையில், மனோகரி கோல்டு டீத்தூள் சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது. சென்ற ஆண்டு 75,000 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது என்றார்.
இந்த அரியவகை தேயிலைத்தூளை சவுரவ் வர்த்தக நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதன் அதிகபட்ச விலை கிலோவுக்கு 99,999 ரூபாய் என விற்கப்படுகிறது. இது போன்ற அரிய வகை டீத்தூளை பல வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்புவதாக பிகானி தெரிவித்தார். இந்த விற்பனை அஸ்ஸாம் தேயிலை விற்பனையில் ஒரு பெரிய மைல் கல்லாகும்.