உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7ஆம் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. அதில் சுரங்கத்தின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதுவரை 35 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 168 பேரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.
சேறுகளை அகற்றி அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவைகளைச் சேர்ந்த 450க்கு மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளியிடமிருந்து அழைப்பு: நம்பிக்கையில் தொழிலாளர்களின் குடும்பம்! இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சுரங்கத்தில் வேலைப்பார்க்கும் தெஹ்ரி கர்வாலில் வசிக்கும் ஜீதேந்திர தனா, தனது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நம்பிக்கை வார்த்தை வந்துள்ளது.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஜீதேந்திர தனாயின் சகோதரி சீமா கூறுகையில், “கடந்த ஐந்து நாள்களாக எனது சகோதரனின் போனிற்கு அழைத்தோம் எடுக்கவில்லை. ஐந்து நாள்களுக்கு பிறகு அவரிடமிருந்து அழைப்பு வந்தது, விரைவில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது” என்றார்.
இதையும் படிங்க...உத்தரகாண்ட் வெள்ளம்: தொலைந்துபோன அமெரிக்க அணு கருவி காரணமா?