ஹைதராபாத் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விமான விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து முப்படைகளின் உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ வீரர்களின் சொந்த ஊர்களில் காரிருள் சூழ்ந்து காணப்படுகிறது.
சாய் தேஜா
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த லான்ஸ் நாயக் சாய் தேஜா, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயி மகனான ரவி தேஜா, தனது 18 வயதில் இராணுவ பணியில் சேர்ந்தார்.
இவருக்கு ஷியாமளா என்ற மனைவியும், நான்கு வயதில் மோக்ஷகனா என்ற மகனும் இரண்டு வயதில் தர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். ராணுவ வீரர் சாய் தேஜாவின் இறப்பு எகுவ ரெகட்டா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோ கால்
சாய் தேஜா, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தனி பாதுகாவலராக கடந்தாண்டு நியமிக்கப்பட்டார். இவர் விபத்து நடைபெற்ற சில மணி நேரத்துக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீடியோ காலில் மகிழ்ச்சியாக உரையாற்றியுள்ளார்.