சிம்தேகா: ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டம், மாத்ரமேட்டா கிராமத்தைச் சேர்ந்த நயீம் மியான் என்ற இஸ்லாமிய இளைஞர், இந்து போல நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சுமார் ஐந்து ஆண்டுகளாக அந்த இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் கருவுற்றார்.
இதையடுத்து திருமணம் செய்து கொள்ளும்படி, நயீம் மியானிடம் கேட்டபோது, அவர் மறுத்துள்ளார். பிறகு தான் இந்து இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே காதலியின் மைனர் சகோதரியையும் நயீம் மியான் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.