தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாய்க்கு நீதி வாங்கித் தர தானே சட்டம் படித்து தாயின் வழக்கறிஞரான மகன்! - தாய்க்காக சட்டம் படித்த மகன்

தெலங்கானாவில், தனது தாயின் ஜீவனாம்சத்தைப் பெற்றுத்தருவதற்காக ஒரு மகன் தானே சட்டம் படித்து, அதில் வாதாடி 30 வருடங்களுக்குப் பிறகு தனது தாய்க்கு ஜீவனாம்சத்தைப் பெற்றுத் தந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

தாய்க்கு நீதி வாங்கித் தர தானே சட்டம் படித்து தாயின் வழக்கறிஞரான மகன்...!
தாய்க்கு நீதி வாங்கித் தர தானே சட்டம் படித்து தாயின் வழக்கறிஞரான மகன்...!

By

Published : Nov 2, 2022, 8:38 PM IST

Updated : Nov 2, 2022, 10:59 PM IST

வாராங்கல், (தெலங்கானா): 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் - தந்தையர் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், தனது தாய்க்கு முறையாக கிடைக்க வேண்டிய ஜீவனாம்சம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதைப்பெற பலமுறை தாயுடன் நீதிமன்ற வாசல் படிகளுக்குச் சென்று விரக்தியடைந்த மகன், தானே சட்டம் படித்து தன் தாய்க்காக வாதாடி வென்றுள்ளார்.

சன்னூர் கிராமத்தைச்சேர்ந்த சுலோசனா என்பவர் வாராங்கலைச் சேர்ந்த பமு சோமய்யா என்பவரை கடந்த 1971ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சரத் பாபு, ராஜா ரவிகிரண் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இந்தத் தம்பதியினரிடையே நாளடைவில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. இதனால் 1992ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்துப்பெற்று பிரிந்தனர். இதையடுத்து, தன்னுடைய தாயார் வீட்டிற்குச்சென்ற சுலோசனா, அங்கு தனது இரண்டு மகன்களை வளர்த்தெடுத்தார்.

அப்போது, தனக்கு தனது கணவன் ஜீவனாம்சம் தர வேண்டுமென வாராங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சுலோசனா வழக்குத் தொடர்ந்தார். இதற்கான ஆணையை நீதிமன்றம் கடந்த 1997ஆம் ஆண்டே வெளியிட்டும், இதுகுறித்த சரியான தகவலை இவர்கள் தரப்பு வழக்கறிஞர் வழங்கவில்லை. இதுகுறித்து சுலோசனாவின் மூத்த மகன் சரத் பாபு பல முறை அலைந்து திரிந்தும், தன் தாய்க்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஜீவனாம்சம் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த சரத் பாபு, தன் தாய்க்கு நீதி வாங்கித் தர தானே சட்டம் படிக்கத்தொடங்கினார். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டம் படித்து முடித்த சரத் பாபு, வழக்கறிஞரானார். இதையடுத்து, 1997ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட ஆணையைப் பெற்று, அதை மேற்கோள் காட்டி வாதாடி, தனது தாய்க்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஜீவனாம்சத்தை வென்று வாங்கித்தந்துள்ளார்.

அதன் படி, சுலோசனாவின்(62) முன்னாள் கணவரான சோமய்யா(72), இவருக்கு ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.30,000 வழங்க வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இதன்மூலம் தனது தாய்க்கு கிடைக்க வேண்டிய நீதியை 30 ஆண்டுகள் கழித்து மகனே போராடி பெற்றுத்தந்துள்ளார்.

இதையும் படிங்க: 'குலா' மூலம் இஸ்லாமியப்பெண்கள் கணவரின் அனுமதியின்றி விவாகரத்து செய்யலாம் - கேரள உயர்நீதிமன்றம்!

Last Updated : Nov 2, 2022, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details