தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹனுமான் கோயில் கோபுரத்தைச் சுத்தியலால் சேதப்படுத்திய இளைஞரால் பரபரப்பு..! - jharkhand

ஜார்கண்ட் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஹனுமான் கோயில் கோபுரத்தில் ஏறி சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

ஹனுமான் கோயில் கோபுரத்தைச் சுத்தியலால் சேதப்படுத்திய இளைஞரால் பரபரப்பு
ஹனுமான் கோயில் கோபுரத்தைச் சுத்தியலால் சேதப்படுத்திய இளைஞரால் பரபரப்பு

By

Published : Nov 1, 2022, 10:40 PM IST

ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகா நகரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஹனுமான் கோயில் சுவரில் ஏறி கோயில் கோபுரத்திற்குச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அந்த இளைஞர் கையில் ஒரு சுத்தியலை எடுத்துச் சென்றதுடன் கோயில் குவிமாட பகுதியைச் சேதப்படுத்தியதாகவும், கோபுரத்தில் ஏற்றப்பட்ட கொடியைப் பிடுங்கி எறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் லோஹர்டகா துணை கமிஷனர் மற்றும் எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறை அதிகாரிகள் இளைஞரை கோபுரத்திலிருந்து வலியுறுத்தி கீழே இறக்கினர்.

இளைஞருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீசார் அந்த இளைஞரிடம் கோயிலைச் சேதப்படுத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஹனுமான் கோயில் கோபுரத்தைச் சுத்தியலால் சேதப்படுத்திய இளைஞரால் பரபரப்பு

இதையும் படிங்க:காந்தி பிறந்த நாட்டில் இருப்பதால் பிரதமருக்கு உலகளவில் மரியாதை - ராஜஸ்தான் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details