ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்தி தருணங்களில் 'கணேஷ் சதுர்த்தி லட்டு ஏலம்' என்று வரும்போது, ஹைதராபாத்தில் உள்ள பாலாபூர் லட்டு பற்றித்தான் அனைவரும் அதிகம் பேசுவார்கள். ஏனெனில் பாலாபூர் லட்டு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஏலத்தில் தனது சாதனையை தானே முறியடித்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
ஆனால், இம்முறை பாலாபூர் லட்டு விலையைவிட, மற்றொரு லட்டின் விலை உயர்ந்து விற்பனையாகியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவ்விலையானது, பாலாபூர் லட்டின் விலையை மும்மடங்காக உயர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ஹைதராபாத்தின் - ராஜேந்திர நகர் பந்தலகுடா எல்லையில் உள்ள ரிச்மண்ட் வில்லா காலனியில் உள்ள லட்டு ஒன்றின் ஏலமானது மாநிலத்தில் புதிய சாதனையினைப் படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை(செப்.11) நடைபெற்ற லட்டு ஏலத்தில், ஒரு லட்டின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ. 69,80,000 லட்சத்திற்கு ஏலம் போனது அனைவரையும் திகைப்படையச் செய்தது.