தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேரனுக்கு சிறுநீரக தானம் செய்த பாட்டி.. கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. - kidney transplant in karnataka

கர்நாடக மாநிலத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த பேரனுக்காக அவரது பாட்டி தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

பேரனுக்காக சிறுநீரக தானம் செய்த பாட்டி
பேரனுக்காக சிறுநீரக தானம் செய்த பாட்டி

By

Published : Feb 15, 2023, 8:43 PM IST

விஜயபூர்: கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஹருகேரியை சேர்ந்த சச்சின் (21) என்பவர் 18 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு தேவைப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதனால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இவரது பெற்றோருக்கு உடல் நலக்கோளாறுகள் இருந்ததால் அவர்களால் சிறுநீரகத்தை தானம் செய்யமுடியவில்லை. இந்த நிலையிலேயே அவரது 73 வயது பாட்டி உத்தவ்வா தனது சிறுநீரகத்தை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

இதனடிப்படையில் இருவருக்கும் விஜயபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (பிப். 15) சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் ரவீந்திர மதராகி தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர் ரவீந்திர மதராகி கூறுகையில், நீரிழிவு நோய் காரணமாக பலருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் நோயாளியின் உறவினர்கள் அல்லது ரத்தப் பொருத்தம் உள்ளவர்கள் முன்வந்தால் மட்டுமே முடியும்.

எங்கள் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறை எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய பேரன் சச்சின், "எனது பாட்டி எனக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவேன். மிகப்பெரிய நன்றி கடன்பட்டுள்ளேன் என உருக்கமாக தெரிவித்தார். உத்தவ்வா மூதாட்டியின் இந்த செயல் அவரது குடும்பத்தாரை மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்தினரிடையேயும் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுவருகிறது பெற்றுவருகிறது.

இதையும் படிங்க:திருமணமான அடுத்த நாளில் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண்

ABOUT THE AUTHOR

...view details