தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயலில் களை எடுக்கும்போது கிடைத்த வைரம் - விவசாயிக்கு அடித்த யோகம்! - கர்னூலில் விவசாயிக்கு அடித்த யோகம்

கர்னூலில் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியின் மகளுக்கு வைரம் ஒன்று கிடைத்துள்ளது.

DIAMOND
DIAMOND

By

Published : Aug 10, 2022, 7:45 PM IST

கர்னூல்: ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் ஜி.ஏர்ராகுடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த விவசாயின் மகளுக்கு நிலத்திலிருந்து பத்து காரட் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த சில வைர வியாபாரிகள் அந்த விவசாயியை அணுகி, சுமார் 34 லட்சம் ரூபாய் கொடுத்து அதை வாங்கியுள்ளனர். ஜொன்னகிரி, பகிடிரை, ஜி.ஏர்ரகுடி, துக்கலி உள்ளிட்ட பகுதிகளில் முதல் பருவமழைக்கு பிறகு, வயல்களில் அவ்வப்போது வைரங்கள் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:நிலக்கரி எடுக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் பாதிப்பு - மத்திய அமைச்சர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details