ஆந்திரா:ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி நகரைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்மணிக்கும், பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திர ரெட்டி தெனாலிக்கு வந்ததாகவும், அப்போதிலிருந்து சந்தியாவுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (2/5/2022) இரவு, ராமச்சந்திர ரெட்டி சந்தியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு, அங்கேயே உறங்கியுள்ளனர். அப்போது, சந்தியாவின் மகள் வேறொரு ஆணுடன் அங்கு சென்றுள்ளார். தாயின் கோலத்தைப் பார்த்த மகள் ஆத்திரமடைந்து அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். நால்வரும் மோதலில் ஈடுபட்டதில், சந்தியாவின் மகளும், அவளுடன் வந்த ஆணும் சேர்ந்து, ராமச்சந்திர ரெட்டியின் பிறப்புறுப்பை அறுத்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: ஸ்கூட்டி ஓட்டிய காதலி - செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலன்