தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்கள் 30 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் புறநகர் ரயில் இயக்கம்
சென்னையில் இன்று முதல் 279 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னையில் புறநகர் ரயில் இயக்கம் புதிய வலைத்தளம் தொடக்கம்
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான, புதிய வலைத்தளம் இன்று முதல் செயல்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறையில் புதிய வலைத்தளம் தொடக்கம் இந்தியா - வங்காளதேசம் மோதல்
வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலக கோப்பைத் தொடர், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடர்களுக்கான ஆசிய நாடுகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய -வங்கதேச அணிகள் மோதும் ஆட்டம், இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.