கட்டாக்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பக்ஸி பஜார் பென்ஷன் லேன் பகுதியில் 60 வயது மூதாட்டியை அடையாளம் தெரியாத இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த சம்பவம் 3 நாட்களுக்கு முன்பு நடந்தது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஒடிசாவில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்புணர்வு - வழக்குப்பதிவு
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் 60 வயதான பெண்ணை அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
ஒடிசாவில் 60 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
அதில், வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத இளைஞர் நுழைந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை தேடிவருகின்றனர். இதனிடையே மூதாட்டியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு