கேரளா: மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆன்லைனில் கல்வி பயின்று வருவதால் பெரும்பாலும் தனது அறையிலேயே இருப்பார் எனக் கூறப்படுகிறது
இவருக்கு தேவையானவற்றை பெற்றோர் அவர் அறைக்கு சென்று கொடுத்துவிட்டு மீண்டும் தங்களது பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அக்.20 ஆம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
யூடியூப் பார்த்து பிரசவம் - பெற்றோர் அதிர்ச்சி
யூடியூப் பார்த்து பிரசவம் - பெற்றோர் அதிர்ச்சி அப்போது, தான் பக்கத்து வீட்டு இளைஞரால் (21) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமானதாகவும், குழந்தையை கலைக்க மனமில்லாமல் இருந்து வந்து, அக்.20 ஆம் தேதி யூடியூப் பார்த்து குழந்தை பிரசவித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி, குழந்தையை மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் கூட தெரிவிக்கவில்லை
சிறுமியின் தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் கூறுகையில், "சில மாதங்களாக மகள், வயிற்று வலி என்று கூறிவந்ததால் அவ்வப்போது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தோம். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூட என் மகளின் கர்ப்பம் குறித்து தெரிவிக்கவில்லை. குழந்தை பிறந்த மறுநாள் தான் எனக்கு தெரியவந்தது" என்றார்.
யூடியூப் பார்த்து குழந்தை பிரசவித்த 17 வயது சிறுமி சிறுமியின் தாய் கண்பார்வை குறைபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமி இளைஞரை காதலிப்பதாக கூறி புகார் தர மறுத்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் காவல்துறையினர் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய், குழந்தை நலமாக உள்ளனர்.
இதையும் படிங்க: உருமாறிய கரோனா.. இருவர் பாதிப்பு.. மீண்டும் அவசர நிலை?