ஜெய்பூர்:ராஜஸ்தானில் பணம் கொடுத்து மைனர் பெண்ணை விலைக்கு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் 13 வயது சிறுமி மனக் சவுக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி, பெற்றோர், 2 சகோதரிகள் உள்ளிட்டோருடன் வசித்து வந்துள்ளார்.
சிறுமியின் மூத்த சகோதரிக்கு, கடந்த 4 - 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இளைய சகோதரி மாற்றுத் திறனாளி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் பாட்டிக்கும், அவர்கள் வீடு இருக்கும் பகுதியில் காய்கறி விற்கும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், திருமணச் செலவுகள் இல்லாமல், பணம் பெற்றுத் தருவதாகவும் சிறுமியின் பாட்டியிடம் காய்கறி விற்கும் பெண் ஆசை வார்த்தை கூறியதாக சொல்லப்படுகிறது. பணம் கிடைக்கும் ஆசையில் சிறுமியுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு பாட்டி சென்றுள்ளார்.
அங்கு ஒரு பெண்ணை அறிமுகப்படுத்திய காய்கறி விற்கும் பெண், அவர்களது பொறுப்பில் சிறுமியை விட்டுவிட்டு 55ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுத் தந்ததாக கூறப்படுகிறது. தன் மகனுக்கு சிறுமியை திருமணம் செய்து வைப்பதாக அறிமுகமான பெண், சிறுமியின் பாட்டியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.