தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கையில் அரசியல் செய்யும் பாஜக’ - கபில் சிபல் குற்றச்சாட்டு

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களின் எண்ணிக்கையை பாஜக அரசு அதிகரித்துக் காண்பித்து அரசியல் செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் சாடியுள்ளார்.

By

Published : Jun 17, 2021, 4:05 PM IST

கபில் சிபல்கபில் சிபல்
கபில் சிபல்கபில் சிபல்

இது குறித்து கபில் சிபல் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “அதிக தடுப்பூசிகள் செலுத்திய உலக நாடுகள் பட்டியலில் மே 24ஆம் தேதியின் படி இந்தியாவைவிட 75 நாடுகள் முன்னிலை வகித்தன. இன்று (ஜூன்.17) கணக்கின்படி 89 நாடுகளுக்குக் கீழ் இந்தியா உள்ளது. நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வெறும் 3.5 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பொது கணக்குக் குழுவில் (PAC - Public Accounts Committee) பாஜக இது குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கபில் சிபல் ட்வீட்

நாட்டில் தற்போதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 26 கோடியே 53 லட்சத்து 17 ஆயிரத்து 472 என ஒன்றிய அரசு நேற்று (ஜூன்.16) தெரிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது முதல் ஒட்டுமொத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் நான்கு கோடியே 72 லட்சத்து ஆறாயிரத்து 953 நபர்கள் முதல் டோஸைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மொத்தம் ஒன்பது லட்சத்து 68 ஆயிரத்து 98 நபர்கள் தங்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர்.

பீகார், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 18-44 வயதுக்கு உள்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மை லார்ட் வேணாம், மேடம் போதும்!

ABOUT THE AUTHOR

...view details