கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் கோடகவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணையம்மா. 88 வயதாகும் இவர், முதன்முறையாகக் கிராம தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், மாநிலத்தின் மூத்த கிராம பஞ்சாயத்துத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சாதனையின் வயது 88 - கிராம தலைவரான மூதாட்டி! - eldest gram panchayat president
பெங்களூரு: சாதனைக்கு வயது ஒன்றும் தடையில்லை. தனது 88 வயதில் அப்படியோரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் தட்சிணையம்மா.
தட்சிணையம்மா.
தேர்தலில் ஜெயித்துவிட்டோம் என்று வீட்டில் உட்காராமல், கிராமம் முழுவதும் சுற்றி வந்தார். அப்போது, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதை நிச்சயம் தீர்ப்பேன் என உறுதியளித்தார். தட்சிணையம்மா வெற்றியை அப்பகுதி மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க:பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழல்: துணைநிலை ஆளுநர் பொறுப்பை ஏற்கிறார் தமிழிசை