மும்பை: மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
59 பேர் காணாமல்போன நிலையில், 90 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் ரத்னகிரி, ராய்காட், கோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, ராய்காட் பகுதியில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவிகள்
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 22) ராய்காட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்காலங்களில் அதிக நிலச்சரிவு ஏற்படுவதால் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை நிரந்தரமாக வெளியேற்றி வேறு பகுதிக்கு மாற்றும் வகையில் அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வரயிருக்கிறது என்றார், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ரத்னகிரி மாவட்டம் சிப்லூன் பகுதியை இன்று (ஜூலை 25) அவர் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.