தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் 8 சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானா நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
சிங்கங்களுக்கு கரோனா

By

Published : May 4, 2021, 5:00 PM IST

Updated : May 4, 2021, 5:10 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே விலங்குகளுக்கு கரோனா கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இந்த சிங்கங்களுக்கு இருமல் உள்ளிட்ட கோவிட் அறிகுறி இருந்ததையடுத்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அங்குள்ள 8 சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது, கரோனா பாதிப்புக்குளான சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், விலங்குகளிருந்து மனிதர்களுக்கு கரோனா பரவும் என எவ்வித ஆதாரங்களும் இதுவரை ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்தண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தில் 8 சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கும், ஹாங்காங்கில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 4, 2021, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details