ஹனாதியால்: தெற்கு மிசோராமின் ஹனாதியால் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் கல் குவாரியில் நேற்று ஏற்பட்ட திடீர் விபத்தில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான லால்ரெம்சங்கா கூறுகையில், “காணாமல் போனவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் பணிகள் தொடரும்.
மீட்பு பணிகளுக்காக, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வரவழைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனதாகக் கூறப்படும் 12 பேரில் 8 பேர் ஒப்பந்த ஊழியர்கள். அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) வீரர்கள், உள்ளூர் காவல்துறை மற்றும் மக்களுடன் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருவதாக” தெரிவித்துள்ளார்.